
Section 77A Case Status – High Court Larger Bench
1908 ஆம் ஆண்டின் பதிவு சட்டத்தில் தமிழ் நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 77A திருத்தப் பிரிவு, உயர்நீதி மன்றத்தின் பல பெஞ்சுகள் முன் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.
இந்த வழக்குகளில் உள்ள சட்டப்பிரச்சினைகள்களை ஆழமாக விசாரிக்க வேண்டும் என்று கருதிய உயர்நீதிமன்றம், எல்லா வழக்குகளையும் ஒரு விரிவாக்கப்பட்ட லார்ஜர் பெஞ்சுக்கு அனுப்பியது. அவற்றின் மீது இப்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
Status of Hearings
பல கட்ட விசாரணைகளுக்குப் பின், இறுதியாக 2024 ஏப்ரல் 15, 16 தேதிகளில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணைகளுக்குப் பின், ஏப்ரல் 22 ந் தேதிக்குள் வழக்கறிஞர்கள் தங்கள் எழுத்துப் பூர்வ வாதங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்துள்ளனர் நீதியரசர்கள்.
ஆக, தீர்ப்பின் தேதிக்காக அனைத்து தரப்பினரும் காத்திருக்கின்றனர்.
லார்ஜர் பென்ச்சில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இந்த வழக்கில் மிகவும் 요மானதாக பார்க்கப்படுகிறது.
Previous Articles
இந்த வழக்கைப்பற்றிய முழு விவரமும் தெரிந்து கொள்ள கீழ்கண்ட லிங்குகளை கிளிக் செய்யவும்:
Brief Details of the Amendment
1908 பதிவுச் சட்டத்தில் புதிய 77A பிரிவை புகுத்தி செய்யப்பட்ட திருத்தம், மாவட்ட பதிவாளர்களுக்கு மோசடி சொத்து ஆவணங்களை ரத்து செய்ய அதிகாரத்தை வழங்குகிறது.
New Section 77A
மோசடிப் பத்திரங்களை ரத்து செய்ய சிவில் நீதிமன்றங்களைத் தான் நாட வேண்டிய நிலை இன்று உள்ளது. இது எத்தனை காலம் ஆகும் என்ற காலவரையறை இல்லாததால், மக்களின் கோரிக்கை மற்றும் நீதிமன்ற அறிவுறுத்தல் காரணமாகத் தான் இந்தத் திருத்தம் அரசால் கொண்டு வரப்பட்டது.
Key Issues Being Argued
ஆரம்பத்தில், இந்தத் திருத்தம் பழைய பத்திரங்களுக்கும், அதாவது இந்தத் திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன் பதியப்பட்ட பத்திரங்களுக்கும் பொருந்துமா என்பது தான் முக்கிய விவாதமாக இருந்தது. ஆனால், இப்போது இன்னும் பல முக்கிய வாதங்கள் முன் வந்துள்ளன.
சொல்லப்போனால், இந்தச் சட்ட திருத்தமே செல்லாது என அறிவிக்க வேண்டும் என்ற கோணத்தில் தான் திருத்தத்தை எதிர்க்கும் தரப்பினர் வாதத்தை முன் வைத்துள்ளனர். அந்த வாதங்களின் தொகுப்பைக் கீழே தருகிறோம்:
Authority Given to Non-Legal Officials
ஒரு ஆவணம் மோசடி ஆவணமா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு சிவில் நீதிமன்றத்திற்கு மட்டுமே உரிமை இருக்கிறது. மாவட்ட பதிவுத் துறைத் தலைவர் ஒரு சட்டம் பயின்றவராக இருப்பது அரிது. பதவி உயர்வு பெற்று அந்தப் பதவிக்கு வருபவர். எனவே, அவரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க முடியாது.
Status of Subsequent Documents
ஒரு மோசடி ஆவணம் பதியப்பட்டு, அந்த மோசடி ஆவணத்தைத் தொடர்ந்து பல ஆவணங்கள் பதியப்பட்டு இருக்கும். …
Can Officials Involved Investigate Their Own Wrongdoing?
ஒரு ஆவணமானது மோசடி ஆவணம் என கண்டறியப்பட்டால், அந்த மோசடி ஆவணத்தை பதிவு செய்த பதிவாளர் மீது புதிய சட்டப் பிரிவு 81A படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படலாம்…
Cancellation Without Investigation
இந்தச் சட்டம் நடைமுறைப் படுத்தினால், எந்த வித விசாரணையும் இன்றி ஒரு ஆவணத்தை மாவட்டப் பதிவாளர் ரத்து செய்ய வாய்ப்பிருக்கிறது.
Pending Civil Court Cases
ஏற்கனவே பதியப்பட்டுள்ள மோசடிப் பத்திரம் சம்மந்தமாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது…
Scope for Reopening Decided Cases
சிவில் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்த பிறகு…
No Time Limit
இந்தச் சட்டப் பிரிவில் கால வரையறை எதுவும் கூறப்படவில்லை…
Rules Not Properly Framed
இந்த சட்டத் திருத்தத்திற்கான உரிய விதிகள் முறையாக வகுக்கப்படவில்லை…
Future of the Amendment
இப்படி வலுவான வாதங்களை சட்டத் திருத்தத்தை எதிர்ப்பவர்கள் முன்வைத்துள்ள பின்னணியில் தான் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு எப்படி வந்தாலும், எதிர் தரப்பு மேல்முறையீட்டிற்கு செல்வதைத் தடுக்க முடியாது என்பதாகத் தான் தோன்றுகிறது.
Leave a Reply