Category: Articles

 

  • Madras High Court Declares Section 77A Unconstitutional | பதிவுச் சட்டம், 1908ல் புதிய பிரிவு 77A திருத்தம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

    Madras High Court Declares Section 77A Unconstitutional | பதிவுச் சட்டம், 1908ல் புதிய பிரிவு 77A திருத்தம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

    Larger Bench Decision:

    Division Bench of The Madras High Court recently(2nd Aug,2004) declared the newly introduced Section 77A of the Registration Act, 1908, by the Tamil Nadu Government as unconstitutional. The court’s decision emphasized that this amendment contravened the principles of the Constitution and the objectives of the Registration Act itself.

    தமிழ் நாடு அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுச் சட்டம், 1908ன் பிரிவு 77A, அரசியலமைப்புக்கு எதிரானது என சென்னை உயர்நீதிமன்றம்அறிவித்துள்ளது. இந்தத் திருத்தம் அரசியலமைப்புச் சட்டத்தின் கொள்கைகளுக்கும், பதிவுச் சட்டத்தின் நோக்கங்களுக்கும் முரணானது என்று நீதிமன்றத்தின் தீர்ப்பு வலியுறுத்தியது.

    Background:

    In September 2021, the Tamil Nadu Assembly passed a bill to amend the Registration Act, 1908, to give the District Registrars of the Registration Department the power to cancel fraudulent or forged documents. This was done by inserting a new Section 77A to the Registration Act, 1908, which became operational from August 2022.

    Many individuals approached the courts challenging this new amendment with different grievances. While some were aggrieved by the District Registrar’s decisions, others, especially from the real estate industry, questioned the constitutional validity of the amendments and the legal principles behind the introduction of this section.

    The cases were filed in the Madras High Court and its Madurai Bench, almost from the early days of introdcution of the new section. In at least two cases, the decisions of individual judges contradicted one another on matters of law and details. One judge interpreted that the law is effective prospectively only, while another judge said it can take retrospective effect. The amended act is silent on this crucial point.

    In the background of these conflicting judgments, the matter came to be heard by a third judge on a different case of the same issue. Since the earlier conflicting judgments were brought to this third judge’s notice, he thought it fit that the matter be heard by a larger bench. The matter was appropriately referred to the Chief Justice of the Madras High Court, who in turn constituted the two-member larger bench comprising Justice S.S. Sundar and Justice N. Senthilkumar.

    The Hearing and Judgment:

    During the hearing before the larger bench, many crucial points, including the constitutional validity of the amendment, were raised by the learned advocates. After many rounds of hearings, the division bench adjourned the hearing in April 2024, without giving a date for the judgment. The judgment was announced on August 2, 2024, when the Madras High Court declared the amendment as unconstitutional and void.

    Situation Before Section 77A:

    Before the introduction of Section 77A, the power to annul a registered document was exclusively held by the civil courts. The Specific Relief Act, 1963, allowed an aggrieved party to approach a civil court seeking specific performance under the Act. This process, however, was time-consuming, often taking many years or even generations before reaching a final resolution.

    Judgement details the Reasons:

    Violation of Constitutional Principles:

    The core argument of the Division Bench in striking down Section 77A was its violation of the constitutional principles of the separation of powers and Article 14 of the Constitution. The amendment had granted the District Registrar the authority to cancel a registered document if it was deemed to be fraudulent. By transferring this power to an executive authority, the amendment attempted to undermine the separation of powers doctrine of the constitution, opines the Court.

    Lack of Guidelines and Unfettered Power:

    The judiciary raised concerns over the lack of clear guidelines governing the powers of the Registrar under Section 77A. Although the provision requires a show cause notice before canceling a document, it leaves much to the discretion of the Registrar, which may lead to arbitrary decision-making.In fact, the judgement refered to a few cases where the decisions were arbitrary or contrary to law.(see below)

    No Time Restrictions:

    Section 77A gives scope for the District Registrar to entertain applications for document cancellation without any time restriction, potentially reopening transactions settled years and decades ago, creating uncertainty in property ownership.

    Parallel Judicial Forum:

    The creation of a parallel judicial forum through Section 77A was seen as an encroachment on the judiciary’s domain. The judiciary consistently held that title disputes and the validity of documents fall within the purview of civil courts, not executive authorities.

    Lack of Judicial Experience:

    District Registrars, typically administrative officers, lack the necessary judicial experience and legal training to determine the fraudulent nature of a document accurately, leading to arbitrary and erroneous decisions.

    Case Examples of Misuse:

    During the brief period when Section 77A was in effect, several instances were documented where the decisions of the District Registrars were legally untenable. The court detailed these cases in its judgment, demonstrating how the amendment had led to wrongful cancellations of documents, causing significant distress and confusion among property owners.

    Registration Act’s Intent and Scope:

    The Registration Act is a procedural law, not a substantive law, meant to maintain public records of transactions involving immovable property. It does not confer title or validate transactions independently. The Transfer of Property Act is the substantive law.In fact the intent of the Registration Act itself was to create public record of transactions and prevent forgery or fraud.

    Endless Litigation:

    Affected parties may continue to approach civil courts even after decisions by the Registrar, leading to prolonged and endless litigation.

    Insecurity in Property Transactions:

    The power to cancel documents long after transactions have been completed can create insecurity and reduce confidence in property transactions.

    Conflict with the Objectives of the Registration Act:

    The Registration Act, 1908, was established to ensure transparency and public awareness regarding property transactions. Section 77A, however, stood in direct contradiction to these objectives.

    Implications of the Judgment:

    Since the court has ruled that Section 77A is unconstitutional and void, it is only natural that all cancellations made by registration authorities become invalid. This will have far-reaching implications, as documents canceled by the District Registrars are now sought to be reinstated, leading to potential conflicts over property ownership. Reports indicate that there were more than 1000 cancellations in the short period Section 77A was in force.

    Future Course of Action:

    Decision to Appeal

    The state government now faces the critical decision of whether to appeal the High Court’s ruling in the Supreme Court or to put in place any other viable alternative to address the issue. Even if an appeal is filed, the likelihood of success remains uncertain, given the detailed constitutional analysis presented in the High Court’s judgment.

    The Need for Retrospective Effect

    It is regrettable that the court struck down the provision for applying retrospective effect to decide cases involving fake or forged documents. This is particularly unfortunate, as a significant number of forgery and impersonation cases occurred in the past due to the absence of safeguards. While current registration practices have been tightened, significantly reducing the likelihood of fraud in new registrations, older cases remain unresolved. The retrospective application of the law was a necessary step to address past wrongs effectively.

    The Responsibility of the State Government

    The amendment, though introduced with the noble intention of tackling fraudulent property transactions, encountered significant legal and constitutional challenges in its implementation. The court’s decision highlights the importance of enacting legislation that not only addresses current issues but also rectifies past injustices while respecting judicial authority and constitutional principles.

    Let us hope the State Government’s next steps will carefully consider the observations in the judgment, ensuring that any new measures do not overlook the need to address past frauds and forgeries in property transactions. Ultimately, the Government bears the responsibility to safeguard the rights and interests of its citizens.

  • Sec 77A: Case Status & Key Issues

    Sec 77A: Case Status & Key Issues

    For backstory, read on…

    1908 ஆம் ஆண்டின் பதிவு சட்டத்தில் தமிழ் நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 77A திருத்தப் பிரிவு,  உயர்நீதி மன்றத்தின் பல பெஞ்சுகள் முன் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

    இந்த வழக்குகளில் உள்ள சட்டப்பிரச்சினைகளை ஆழமாக விசாரிக்க வேண்டும் என்று கருதிய உயர்நீதிமன்றம், எல்லா வழக்குகளையும் ஒரு விரிவாக்கப்பட்ட லார்ஜர் பெஞ்சுக்கு அனுப்பியது. அவற்றின் மீது இப்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

    வழக்கின் நிலை | Status of Hearings

    பல கட்ட விசாரணைகளுக்குப் பின், இறுதியாக 2024 ஏப்ரல் 15, 16 தேதிகளில் விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணைகளுக்குப் பின், ஏப்ரல் 22 ந் தேதிக்குள் வழக்கறிஞர்கள் தங்கள் எழுத்துப் பூர்வ வாதங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்துள்ளனர் நீதியரசர்கள்.

    ஆக, தீர்ப்பின் தேதிக்காக அனைத்து தரப்பினரும் காத்திருக்கின்றனர்.

    லார்ஜர் பென்ச்சில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் இந்த வழக்கில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    முந்தைய கட்டுரைகள் | Previous Articles

    இந்த வழக்கைப்பற்றிய முழு விவரமும் தெரிந்து கொள்ள கீழ்கண்ட லிங்குகளை கிளிக் செய்யவும்

    1. பதிவு சட்டம் தொடர்பான முதல் கட்டுரை
    2. முதல் கட்டுரையின் தொடர்ச்சி

    திருத்தத்தின் விவரங்கள் சுருக்கமாக | Brief Details of the Amendment

    1908 பதிவுச் சட்டத்தில் புதிய 77A பிரிவை புகுத்தி செய்யப்பட்ட திருத்தம், மாவட்ட பதிவாளர்களுக்கு மோசடி சொத்து ஆவணங்களை ரத்து செய்ய அதிகாரத்தை வழங்குகிறது.

    புதிய பிரிவு 77A | New Section 77A

    மோசடிப் பத்திரங்களை ரத்து செய்ய சிவில் நீதிமன்றங்களைத் தான் நாட வேண்டிய நிலை இன்று உள்ளது. இது  எத்தனை காலம் ஆகும் என்ற காலவரையறை இல்லாததால், மக்களின் கோரிக்கை மற்றும் நீதிமன்ற அறிவுறுத்தல் காரணமாகத் தான் இந்தத் திருத்தம் அரசால் கொண்டு வரப்பட்டது.

    நீதிமன்றத்தில் விவாதிக்கப்படும் முக்கிய கேள்விகள் | Key Issues Being Debated

    ஆரம்பத்தில், இந்தத் திருத்தம் பழைய பத்திரங்களுக்கும், அதாவது இந்தத் திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன் பதியப் பட்ட பத்திரங்களுக்கும் பொருந்துமா என்பது தான் முக்கிய விவாதமாக இருந்தது.

    ஆனால், இப்போது இன்னும் பல முக்கிய வாதங்கள் முன் வந்துள்ளன.

    சொல்லப்போனால், இந்தச் சட்ட திருத்தமே செல்லாது என அறிவிக்க வேண்டும் என்ற கோணத்தில் தான் திருத்தத்தை எதிர்க்கும் தரப்பினர் வாதத்தை முன் வைத்துள்ளனர்.

    அந்த வாதங்களின் தொகுப்பைக் கீழே தருகிறோம்:

    ஒரு ஆவணம் மோசடி ஆவணமா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கு சிவில் நீதிமன்றத்திற்கு மட்டுமே உரிமை இருக்கிறது. மாவட்ட பதிவுத் துறைத் தலைவர் ஒரு சட்டம் பயின்றவராக இருப்பது அரிது. பதவி உயர்வு பெற்று அந்தப் பதவிக்கு வருபவர். எனவே, அவரிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க முடியாது.

    2. ஒரு மோசடிக்குப் பின் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் நிலை | Status of Subsequent Documents

    ஒரு மோசடி ஆவணம் பதியப்பட்டு, அந்த மோசடி ஆவணத்தைத் தொடர்ந்து பல ஆவணங்கள் பதியப்பட்டு இருக்கும். அதனைத்தொடர்ந்து அந்த சொத்து உருமாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.வாங்கியவர்களோ அல்லது விற்பவர்களோ அப்பாவிகளாக (innocent buyers or sellers) இருப்பார்கள்.

    இந்நிலையில் பாதிக்கப்பட்டவர் ஒரு மோசடி ஆவணத்தை ரத்து செய்யப் புகார் மனு செய்து அந்த மோசடி ஆவணம் ரத்து செய்யப்பட்டால்,  அதன்பிறகு ஏற்படுத்தப்பட்ட சொத்துப் பரிமாற்ற ஆவணங்களின் நிலை பற்றி இந்தச் சட்டத் திருத்தம் எதுவும் சொல்லவில்லை.

    அதாவது, மோசடி ஆவணத்தை ரத்து செய்வது பற்றி இந்தச் சட்டத்தில் இருக்கும்போது, மோசடி ஆவணத்தைத் தொடர்ந்து பதியப்பட்ட பத்திரங்களை ரத்து செய்யலாமா, கூடாதா என்பதைப் பற்றித் தெளிவாக இந்தச் சட்டப் பிரிவு 77Aலோ அல்லது வேறெங்குமோ எதுவும் குறிப்பிடப்படவில்லை.

    3. தவறு செய்த அதிகாரியே புகாரை விசாரிக்கலாமா? | Can officials involved in fraudulent document issue, investigate their own wrongdoing?

    ஒரு ஆவணமானது மோசடி ஆவணம் என கண்டறியப்பட்டால், அந்த மோசடி ஆவணத்தை பதிவு செய்த பதிவாளர் மீது புதிய சட்டப் பிரிவு 81A படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படலாம். அப்படி இருக்கும் போது, அவர் பதவியில் இருக்கும்போது அந்த ஆவணம் மோசடி ஆவணமா இல்லையா என்பதை உறுதி செய்யும் அதிகாரம் அவரிடமே இருக்கக் கூடாது.

    4. விசாரணை இன்றி ஆவணங்களை ரத்து செய்வது நடந்தால்… | Cancellation of Documents Without Investigation

    இந்தச் சட்டம் நடைமுறைப் படுத்தினால், எந்த வித விசாரணையும் இன்றி ஒரு ஆவணத்தை மாவட்டப் பதிவாளர் ரத்து செய்ய வாய்ப்பிருக்கிறது.

    5. வழக்கு நிலுவையில் இருக்கும் போது… | Pending Civil Court Cases

    ஏற்கனவே பதியப்பட்டுள்ள மோசடிப் பத்திரம் சம்மந்தமாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அது சம்மந்தமாக ஒரு புகார் மனுவை மாவட்டப் பதிவாளர் விசாரணை செய்யும்போது, ஒரே பிரச்சினை சம்மந்தமாக ஒரே ஆவணம் சம்மந்தமாக இரண்டு இடங்களில் விசாரணை நடக்கும் நிலை ஏற்படலாம். இது மேலும் குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும்.

    6. முடிக்கப்பட்ட வழக்குகள் மீதும் புகார் அளிக்க வாய்ப்பு | Scope for Reopening Decided Cases

    சிவில் நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்த பிறகு, மறுபடியும் இந்தப் பிரிவு 77A ன் கீழ் மாவட்டப் பதிவாளருக்கு மனு செய்யும் வகையில் இந்த சட்டப் பிரிவு இருக்கிறது.

    7. புகார்களுக்குக் கால வரையறை இல்லாமை | No Time Limit for Filing Complaints

    இந்தச் சட்டப் பிரிவில் கால வரையறை எதுவும் கூறப்படவில்லை. எனவே எந்த ஒரு காலத்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ள மோசடி ஆவணங்களையும் ரத்து செய்வதற்கு இந்த சட்டப் பிரிவின் கீழ் புகார் மனு செய்ய முடியும்.

    8. விதிகள் முறையாக வகுக்கப் படவில்லை | Rules are not framed as per procedure

    இந்த சட்டத் திருத்தத்திற்கான உரிய விதிகள்(Rules) முறையாக வகுக்கப்படவில்லை. பதிவுத்துறைத் தலைவரின் சுற்றறிக்கை மூலம் மட்டுமே விசாரணைகள் நடைபெறுகிறது.

    சட்டத் திருத்ததின் எதிர்காலம் | Future of the Amendment

    இப்படி வலுவான வாதங்களை சட்டத் திருத்தத்தை எதிர்ப்பவர்கள் முன்வைத்துள்ள பின்னணியில் தான் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    தீர்ப்பு எப்படி வந்தாலும், எதிர் தரப்பு மேல்முறையீட்டிற்கு செல்வதைத் தடுக்க முடியாது என்பதாகத் தான் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

  • Self-Certification Scheme for Building Plan Approval in Tamil Nadu: An Introduction

    Self-Certification Scheme for Building Plan Approval in Tamil Nadu: An Introduction

    பொதுமக்கள் கட்டிட அனுமதிக்காக அலுவலகங்களுக்குச் சென்று வரும் நேரத்தை முழுமையாக தவிர்த்து, வெளிப்படைத் தன்மையுடனும் நடைமுறையில் உள்ள கட்டிட விதிகளை எளிமைப்படுத்தியும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது இந்த சுயச்சான்றிதழ் திட்டம். இதுவும் ஒற்றைச் சாளர முறையில்(Single Window System) தான் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

    தற்போதுள்ள ஒற்றைச் சாளர முறைபோல் அல்லாமல், இந்தச் சுய சான்றிதழ் திட்டத்தில் ஒப்புதல் பெற, ஆவணங்களை விண்ணப்பதாரர்களின் சுயச் சான்றிதழுடன் பதிவேற்றலாம்.நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களோடு, பதிவு செய்த பொறியாளர்/ஆர்கிடெக்ட் வரைந்த கட்டிடத்தின் வரை படத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

    இந்தத் திட்டத்தின் படி,ஆய்வுக் கட்டணம், உள்கட்டமைப்பு மற்றும் வசதிக் கட்டணங்கள், ஆகியவை கட்டத் தேவையில்லை.இதர கட்டணங்களான Development Charges, Building Licence Fees, Tamil Nadu Construction Workers Welfare Fund, Road Cut Restoration Charges ஆகிய அனைத்தும் ஒருங்கிணைத்து, Flat Rate ஆக செலுத்த வேண்டும். சென்னை மாநகரைப் பொறுத்தவரை, இந்த ஒருங்கிணைந்த கட்டணம்(Consolidated Fee) ச அடிக்கு ₹ 100/- என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது. எல்லா பகுதிகளுக்குமான ஒருங்கிணைந்த கட்டண விவரம் தெரிந்து கொள்ள அரசின் சுற்றறிக்கையை கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.

    நீங்கள் அளிக்கும் அனைத்துத் தகவல்களும் உண்மை என்றும், கட்டிடப் பணிகள் எல்லாம் ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின்படி தான் (Tamil Nadu Combined Development and Building Rules, 2019) செய்வதாகவும் உறுதி தரும் சுய அறிவிப்பு (Self-Declaration) தர வேண்டும்.

    இந்தச் சுய அறிவுப்பு அனைத்துமே, ஏற்கனவே அந்த மென்பொருளிலேயே வரிசையாகத் தரப்பட்டுள்ளன. அவற்றை ஏற்றுக் கொண்டதற்காக, அவற்றிற்கான கட்டங்களை டிக் செய்து, மின் அணு முறையில் ஒப்பம் இட வேண்டும். அனைத்தும் மிக எளிதாக, செய்து முடிக்க முடியும்.

    இதற்கான வெப்சைட் முகவரி: onlineppa.tn.gov.in .

    ஆன்லைனில் பதிவு செய்வது, பணம் கட்டுவது, ஒப்புதல் ஆணை பதிவிறக்கம் செய்வது உட்பட, அனைத்து செயல்முறகளும் கொண்ட ஒரு கையேடு அரசு வெளியிட்டுள்ளது- Self-Certification User Maual

    2500 சதுர அடி வரை அளவுள்ள நிலங்களில், 3500 சதுர அடி வரை கட்டப்படும் வீடுகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தும். புதிதாக வீடு கட்டுகிறவர்களுக்கு மட்டுமல்லாமல், பழைய வீடுகளை மாற்றி அமைக்கவோ அல்லது, விரிவாக்கம் செய்யவோ கூட இந்தத் திட்டம் பயன் படும்.

    கட்டிடத்தின் உயரம் 7 மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    மேலும், மின் இணைப்பு உள்ளிட்ட அரசின் சேவைகளைப் பெற, நிறைவுச் சான்றிதழ் பெறத் தேவையில்லை என்பதும் இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சம்.

    கட்டிடம் கட்டும்போது விதிமீறல் கண்டறியப்பட்டால் உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  விண்ணப்பதாரரின் சுயசான்று ஆவணங்கள் மற்றும் கட்டிட வரைபட அனுமதி ஆகியவற்றில் ஏதாவது தவறு கண்டறியப்பட்டால் விண்ணப்பதாரருக்கு உரிய தண்டனை வழங்கப்படும்.

    சம்ர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 10% வரை அதிகாரிகள் களஆய்வு செய்யலாம், என அரசு வெளியிட்ட ஆணை தெரிவிக்கிறது.

    கட்டுமான பணிகள் முடிந்த 30 நாட்களுக்குள் சொத்து வரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த திட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள மேலே படிக்கவும்

    What is the Self-Certification Scheme?

    It was in the Tamil Nadu Assembly Budget session of 2024-2025, the announcement was made about the Self-Certification Scheme for Building Plan Approval. Now, the Chief Minister M.K. Stalin launched a single-window self-certification system on July 22, 2024, allowing building permissions for plots measuring up to 2,500 square feet and having a built-up area of up to 3,500 square feet.

    According to this scheme. the applicant has to self-certify that all the information provided in the application are true and the the building plan is inaccordance with all the rules in force.

    This scheme applies to the construction of residential buildings with a ground or ground plus one floor, not exceeding seven meters in height.

    This Self-Certification Scheme offers an easy and simplified process for building plan approval, and the charges usually associated with plan sanction like scrutiny fees, infrastructure and amenities charges, are not applicable for applications made under this scheme.

    The Development Charges, Building Licence Fees, Tamil Nadu Construction Workers Welfare Fund, Road Cut Restoration Charges have been consolidated into a Flate Rate. For Chennai, the rate payable is ₹ 100/ sq.ft. For the entire for different categories of Municipalities and Town Panchayats, the rates are published by the Govt. You can find out the rates from the GO which can be accessed by clicking the button below.

    The self-certification or declaration issued by the applicant must state that the building plan and site plan comply with the relevant laws and regulations.

    Eligibility Criteria

    To be eligible for the Self-Certification Scheme, the applicant must meet the following criteria:

    1. Ownership and Plot Size: The applicant should be the owner of the land, a leaseholder, or a power of attorney holder with the right to develop the land. The plot size must be up to 2,500 square feet, and the built-up area should not exceed 3,500 square feet for residential purposes, accommodating up to two dwelling units with a ground floor or ground plus one floor. The total height of the building shall not exceed 7 meters.
    2. Approved Plots: Only plots in approved layouts, layouts regularized under the Tamil Nadu Regularisation of Unapproved Layouts and Plots Rules, 2017, approved subdivision plans, and plots registered by a deed before October 20, 2016, are eligible.

    Non-Applicability of the Self-Certification Scheme

    The Self-Certification Scheme does not apply to the following areas:

    1. Restricted Areas: CRZ (Coastal Regulation Zone), HACA (Hill Area Conservation Authority), and development-prohibited/restricted areas as specified in Rule 19 Annexure XVII of the Tamil Nadu Combined Development and Building Rules, 2019.
    2. Specific Land Classifications: Lands classified as agricultural, institutional, special & hazardous, non-urban, open space, and recreational use zones. Additionally, sites falling under street alignment, road widening, roads, and areas reserved for public purposes in various planning documents (Master plans, New Town Development Plans, Detailed Development Plans, and Grids of Roads plans) are also excluded.

    Procedure for Submission of Application

    To apply under the Self-Certification Scheme, applicants must follow a structured procedure:

    1. Registration: First, register your name on the Single Window Portal for Planning Permission onlineppa.tn.gov.in with your Aadhar Card ID. Then, log in with your credentials.
    2. Document Submission: The applicant must upload detailed information about themselves, the plot, and the proposed building along with the following documents:
      • Site photographs
      • Self-attested registered sale deed document to prove ownership
      • Self-attested Patta/Town Survey Land Register in favor of the owner
      • Self-attested approved layout/approved subdivision plan/FMB/plot or layout regularized under the 2017 regularisation rules/one link document proving the site’s existence before October 20, 2016
      • Building plan with site plan, specifications, and key plan signed by an architect or registered engineer in PDF format

    The portal allows marking the GIS coordinates or Geo coordinates of the plot. The Geo coordinates system will automatically notify the user if the plot requires a No Objection Certificate (NOC). If an NOC is required based on the GIS location mapping, the user must follow the normal application process. The page will display the type of NOC required for the plot, e.g., if the plot is in a Coastal Regulatory Zone area.

    1. Self-Declaration: After uploading the documents, there will be a series of declarations the applicant has to e-sign. The declarations have checkboxes that must be ticked before e-signing. The e-sign process is linked to the Government of India’s C-DAC e-sign service.
    2. Payments and Payment Gateway: The user will then be redirected to the payment stage. Click on “Make Payment” after the selection, and the user will be redirected to the payment gateway to complete the payment. The other amounts payable and payment options will be displayed on the page. Once the payment is completed, download the permit letter, building plan drawing letter, fees receipt, and inspection letter.
    3. The complete procedure for registration and submitting the application is explained in the User Manual

    Planning Parameters

    The scheme outlines specific planning parameters and building rules for self-certified buildings:

    1. Minimum Road Width and Maximum Height:
      • Minimum road width: 1.5 meters for economically weaker sections and continuous building areas; 3 meters for other areas.
      • Maximum building height: Ground Floor + 1 Floor, subject to a maximum of 7 meters.
    2. Floor Space Index (FSI):
      • Permissible FSI: 2.0 (The achievable FSI for the particular land must be decided based on the road width, plot frontage, etc.)
    3. Setbacks:
      • Front Setback: 1.5 meters for plots up to 9 meters wide; no setback required for economically weaker sections.
      • Side Setback: Varies depending on plot width.
      • Rear Setback: None specified for economically weaker sections.
      • Water Bodies Buffer: Varies from 1 meter to 15 meters depending on the type of water body.

    Sanction and Verification

    Upon payment of other charges/fees, the approved plan and proceedings with a QR code and the applicant’s e-signature are generated online instantly and available for download.

    Random Verification and Inspection

    The competent authority conducts random verifications covering a minimum of 10% of submitted applications each month to ensure compliance. The competent authority reserves the right to inspect building plans and constructions at any stage. Any violations found must be rectified by the owner; otherwise, the authority may take steps to remove the violations. The permission granted is valid for five years from the date of issue and may be extended once for another three years upon application before the expiry date.

    Action for Misrepresentation

    Any fraud or misrepresentation in the application can lead to severe penalties, including prosecution under relevant sections of the Bharatiya Nyaya Sanhita, 2023, and the Bharatiya Nagarik Suraksha Sanhita, 2023. The competent authority may also take penal action as per the provisions of the Tamil Nadu Town and Country Planning Act, 1971, and other applicable laws.

    Conclusion

    The Self-Certification Scheme for building plan approval in Tamil Nadu provides an efficient and expedited process for small-scale residential constructions. By adhering to the specified eligibility criteria, planning parameters, and submission procedures, applicants can benefit from quicker approvals while ensuring compliance with building regulations. This scheme not only simplifies the approval process but also maintains the integrity and safety of building developments in the state.