
அங்கீகரிக்கப்படாத மனைகள் அங்கீகரிக்கும் விதிமுறைகள்
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகளை வரைமுறைபடுத்த என்ன செய்ய வேண்டும்?
அங்கீகரிக்கப்படாத விட்டு மனைகளை வரைமுறைப்படுத்துவதற்கான விதிமுறைகளை, தமிழ்நாடு அரசு,மே 4, 2017 தேதியிட்ட அரசாணை மூலம் வெளியிட்டுள்ளது.
அத்தோடு, விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவது குறித்த விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத விட்டு மனைகளுக்கான விதி முறைகளுக்கான முக்கிய அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன:
1.20.10.2016 க்கு முன் பதிவு செய்யப்பட்ட எல்லா வீட்டு மனைகளுக்கும் இந்த விதி முறைகள் பொருந்தும்
2.தகுதி உள்ள எல்லா லே அவுட்டுகளுக்கும் 15 நாட்களுக்குள் (27.05.2017 க்கு முன்)சம்பத்தப்பட்ட அதிகாரி கொள்கையளவில் அங்கீகாரம் வழங்குவார்.
3.லே-அவுட்டுக்கு அங்கீகாரம் தரப்பட்டாலும், ஒவ்வொரு மனைக்கும் தனித்தனியாக அங்கீகாரம் பெறவேண்டும்.
4.சப்-டிவிஷன் செய்யப்பட்ட எல்லா மனைகளும் இது போல் தனித்தனியாக அங்கீகாரம் பெற வேண்டும்.8 வீட்டு மனைகளுக்குட்பட்ட சிறிய லே-அவுட்டுகளுக்கும் இது பொருந்தும்.
6. 6 மாதத்திற்குள் ஆன்-லைனில் உரிய படிவத்தில், இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இதற்கென்று தனியாக www.tnlayoutreg.in என்ற இணைய தளத்தை தமிழக அரசு உருவாக்கி உள்ளது. ரூ.500 ஆன்-லைனில் செலுத்தி, உரிய படிவத்தில் விண்ணப்பித்தால், ஒரு பதிவு எண் கொண்ட ரசீது ஆன்-லைனிலேயே கிடைக்கும். அந்த ரசீதுடன், மனை சம்பந்தமான டாக்குமென்டுகள், வரைபடங்களுடன் சம்பந்தப்பட்ட மாநகராட்ச்சி அலுவலகத்திற்கு சென்று, செலுத்த வேண்டிய தொகைகளை செலுத்தி அங்கிகாகரம் பெற வேண்டும்.(பணம் செலுத்துவது நேரடியாகவா அல்லது ஆன்-லைனிலா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை)
3.செலுத்த வேண்டிய தொகை பற்றிய விவரங்கள் (CMDA எல்லைகளுக்குள்)
வரைமுறை கட்டணம்(Regularisatioin Charges): ச.அடிக்கு ரூ 9.30/-
வளர்ச்சி கட்டணம் (Development Charges): ச.அடிக்கு ரூ. 55.75/-
திறந்த வெளி நிலத்திற்கான கட்டணம் (OSR Charges):
சம்பந்தப்பட்ட லே-அவுட்டில் ரோடு, பூங்கா,விளையாட்டு மைதானம் போன்ற பொது தேவைகளுக்கான இடங்கள் எவ்வளவு விடப்பட்டிருக்கின்றதோ அதை பொறுத்து இந்த தொகை மாறுபடும். இந்த கட்டணம், அதிக பட்சமாக வழிகாட்டு மதிப்பில் (Guideline Value), 10% ஆக இருக்கும்.(குறிப்பு:2007 ஆகஸ்டுக்கு முன் பதிவு செய்யப்பட்ட மனைகளுக்கு, 2007 ஆகஸ்டில் இருந்த வழிகாட்டு மதிப்பின் பேரில் தான் இந்த கட்டணம் கணக்கிடப்படும்)
4.கீழ்கண்ட இடங்களில் உருவாக்கப்பட்ட மனைகளுக்கு இந்த வரைமுறைப்படுத்தல் பொருந்தாது:
-நீர்நிலைகள், நீர்வழித்தடங்களில்
-அரசு புறம்போக்கு நிலங்களில்
-அங்கீகரிக்கப்பட்ட லேஅவுட்டுக்களில் உள்ள திறந்த வெளி நிலங்களான ( OSR Land), விளையட்டு மைதானம், பூங்கா இவற்றில்,
-ரோடு, ரயில் போக்குவரத்திற்கென்று நிச்சயிக்கப்பட்ட இடங்களில்,
……..
5.இந்த வரை முறைப்படுத்துதல், ஏற்கனவே இருக்கும் சட்டங்களுக்குட்பட்டே நடைமுறைப்படுத்தப்படும். குறிப்பாக, கடற்கரை பகுதிகள், விமானதளங்கள் அருகில் இருக்கும் பகுதிகள், மலைப்பகுதிகள் , தொல்பொருள் ஆராய்ச்சி இடங்கள்..சம்பந்தமான சட்டங்கள்/விதிமுறைகளுக்குட்பட்
6.இந்த விதிகளின் படி,விண்ணப்பித்து அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளை இனி பதிவு செய்யவே முடியாது. மட்டுமல்ல, அவற்றிற்கு, மின் இணைப்பு, குடிநீர்/சாக்கடை இணைப்புகளும் தரப்படாது. இதற்கான உத்தரவுகள் அந்தந்த துறைகளுக்கும் அனுப்பப்படும்.
இந்த வரைமுறைப்படுத்தல் விதிகள் , நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, மே மாதம் 12-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு மீண்டும் 14.6.2017 அன்று விசாரணைக்கு வருகிறது
வரைமுறை படுத்தல் பற்றிய மேலும் விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்
மே 12, 2017 அன்று வெளியான தீர்ப்பை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்
விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கான புதிய விதி முறைகளை தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்
Leave a Reply